எதிர்காலத்தில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
லிட்ரோ எரிவாயு விலையை 210 ரூபாவால் அதிகரிப்பதற்கான அனுமதி கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு கிடைக்கும் எரிபொருள் தாங்கிய இறுதி கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது.
அந்த கப்பலில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்