சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யவும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தவும் சட்ட மா அதிபர் வழங்கிய ஆலோசனைகளை இதுவரை அமுல் செய்யாமை தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று
(15) பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
மைனா கோ கம, கோட்டா கோ கம மீதான அரச ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்றைய தினம் விசாரணையாளர்களான சி.ஐ.டி.யினருக்காக சிரேஷ்ட பிரதி சொலிசிடர் ஜெனரல் டிலான் ரத்னாநாயக்க, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் றியாஸ் பாரி, அரச சட்டவாதி சஜித் பண்டார உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
பிற செய்திகள்




