
நிட்டம்புவ,ஜுன் 15
நிட்டம்புவ, கலல்பிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட வங்கி உத்தியோகத்தர் உட்பட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்ல நீதிவான் புதன்கிழமை (15) உத்தரவிட்டார்
இன்று அதிகாலை எரிபொருள் தீர்ந்து விட்டதாக அதன் ஊழியர்கள் தெரிவித்தபோது வரிசையில் நின்ற சந்தேக நபர்கள் நால்வரும் அது பொய் எனக் கூறியுள்ளனர்.
பின்னர் அங்கு கடமையிலிருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கடமைக்கும் சந்தேக நபர்கள் இடையூறு விளைவித்ததன் காரணமாக இவர்கள் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.




