‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த பிளாக்பஸ்டர் தமிழ் திரைப்படங்கள்

‘சூப்பர் ஸ்டார்’ என தமிழ் சினிமா ரசிகர்கள் / நட்சத்திரங்கள் கொண்டாடும் ரஜினிகாந்த் நடித்த பிளாக்பஸ்டர் தமிழ் திரைப்படங்கள் இங்கு உள்ளன.

இந்த பட்டியலில் சிறந்த திரைக்கதை அம்சங்களோடு, திரைப்பட ரசிகர்களின் உள்ளம் கவர்ந்து வசூல் சாதனை படைத்துள்ள ரஜினியின் திரைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

[embedded content]

பாட்ஷா, அருணாச்சலம், சிவாஜி, படையப்பா என ரஜினிகாந்த் நடித்த பல வெற்றி திரைப்படங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

1. மூன்று முடிச்சு

மூன்று முடிச்சு இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் கமல் ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம்.

2. 16 வயதினிலே

16 வயதினிலே இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்துள்ள காதல் திரைப்படம்.

3. பைரவி

பைரவி இயக்குனர் எம். பாஸ்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா என தமிழ் நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம்.

4. முள்ளும் மலரும்

முள்ளும் மலரும் இயக்குனர் ஜெ. மஹேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சரத் பாபு நடித்துள்ள திரைப்படம்.

5. அபூர்வ ரகங்கள்

அபூர்வ ரகங்கள் இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீ வித்யா நடித்திருக்கும் திரைப்படம்.

6. ஆறிலிருந்து அறுபது வரை

ஆறிலிருந்து அறுபது வரை இயக்குனர் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சோ, சங்கீதா என பல தமிழ் நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம்.

7. தில்லு முல்லு 1981

தில்லு முல்லு இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த், தேங்காய் ஸ்ரீனிவாசன், மாதவி நடித்த நகைச்சுவை திரைப்படம்.

8. தளபதி

தளபதி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி, அரவிந்த் சாமி நடித்துள்ள அதிரடி திரைப்படம்.

9. அண்ணாமலை

அண்ணாமலை இயக்குனர் சுரேஷ் க்ரிஷ்னா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, சரத் பாபு நடித்துள்ள குடும்பத்திரைப்படம்.

10. முத்து

முத்து இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, ரகுவரன் என தமிழ் திரைப்பட முன்னணி நடிகை நடிகர்கள் பலர் நடித்துள்ள அதிரடி குடும்பத்திரைப்படம்.

11. அருணாச்சலம்

அருணாச்சலம் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, செந்தில் நடித்த குடும்ப நகைச்சுவை திரைப்படம்.

12. பாட்ஷா

பாட்ஷா இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வீரப்பன் தயாரிக்க, …

13. படையப்பா

படையப்பா இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், சௌந்தர்யா, செந்தில் மற்றும் பல நடிகர்கள் நடித்திருக்கும் அதிரடி மற்றும்குடும்பத்திரைப்படம்.

14. சந்திரமுகி

சந்திரமுகி இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ரஜினி காந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர் மற்றும் பலர் நடித்துள்ள த்ரில்லர் நகைச்சுவை திரைப்படம்.

15. சிவாஜி : தி பாஸ்

சிவாஜி : தி பாஸ் 2007-ம் ஆண்டு வெளிவந்த காதல், நகைச்சுவை மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க, ரஜினி காந்த், ஸ்ரேயா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

16. எந்திரன்

எந்திரன் 2010ல் வெளியான ஒரு அறிபுனை தமிழ்த் திரைப்படமாகும். சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *