
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பயணித்த பெண்கள் இருவரை மோதித் தள்ளிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் பிரதான வீதி மார்ட்டின் வீதிக்கு அண்மித்த பகுதியில் இன்று இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பெண்கள் இருவர் பயணித்துக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த வான் ஒன்று அவர்களை மோதியுள்ளது.
சம்பவத்தில் பெண்கள் இருவரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் அங்கிருந்த மக்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளை மோதிய வாகனம் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
அதன் இலக்கத்தகடு மோட்டார் சைக்கிளில் சிக்கிய நிலையில் அங்கிருந்தவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
பிற செய்திகள்




