நாடு முன்னேற ராஜபக்ச குடும்பம் பின்வாங்க வேண்டும்! இரான் விக்கிரமரத்ன

இந்த நாட்டில் பொருளாதார பிரச்சனை குறித்து வெளி நாடுகளில் தேவைப்படுவது “நம்பிக்கை” அது ராஜபக்ச குடும்பத்தினரிடம் இல்லை என பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இங்கு அவசரமாக மின்சார உற்பத்தி (emergency electricity) ஐ பெறுவது என்பது சாத்தியம் அல்லாதது.

அதே போல, நாட்டில் மின்சாரத்திற்கு பெறும் பணத்தை போல பல்வேறு அத்தியாவசிய செலவுகளும் காணப்படுகின்றன.

அதாவது எரிபொருள் வழங்குதல், போக்குவரத்து சேவைகள் என்பவற்றிற்கு வேறு வேறு செலவுகள் ஏற்படும்.

எனவே சம்பளங்கள் விலை உயர்வு என்பன மின்சார சபையின் பணியாளர்களிற்கு மட்டுமல்ல அரசாங்க சேவையாளர்களிற்கும் அதே பிரச்சினை.

இதற்கு காரணம் மக்களோ மின்சார சபையோ அல்ல. அரசியல் வாதிகளே முக்கிய காரணம்.

மின்சாரம் என்பது அத்தியாவசியமான விடயம். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

நான் கூறுவது மின்சாரம் எங்கு இருந்து கிடைத்தாலும் பரவாயில்லை, ஆனால் மக்களுக்கு குறைந்த விலையிற்கு வழங்கப்பட வேண்டும்.

உண்மையில் இந்த நாட்டில் பொருளாதார பிரச்சனை குறித்து வெளி நாடுகளில் தேவைப்படுவது “நம்பிக்கை” அது ராஜபக்ஷ குடும்பத்தினரிடம் இல்லை.

நாட்டை முன்னேற்ற ராஜபக்ஷ குடும்பத்தினர் பின் வாங்க வேண்டும்.

அதாவது வெளிநாட்டு நம்பிக்கை பெற உதவியை பெற தேர்தல் வைப்பது சிறந்தது.

ஆனால் அதற்கு அதிக செலவாகும் என்ற கருத்து பொய்.

அனாவசிய தேவைகளிற்கு வழங்கப்படும் பணத்தை இதற்கு செலவிடுங்கள் -என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *