இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மிகவும் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் கடந்த சில மாதங்களாக தொடரும் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடுக்கு இன்றுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை.
அதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக துறைசார் செயற்பாடுகள் முடக்க நிலைக்கு செல்லும் நிலை தோன்றியுள்ளது.
இதேவேளை நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்கொள்வதோடு குறிப்பாக தமது கடமை நிமிர்த்தம் பயணிப்போர் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இன்றையதினம் பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவைகளை தொடர்வதால் வேலைகளுக்கு செல்வோர் இன்றைய தினம் புகையிரதங்களில் பயணித்ததுடன் புகையிரத பெட்டிகள் மற்றும் புகையிரத வெளிப்பகுதி மற்றும் எஞ்சின் பகுதிகளில் உயிரை பணயம் வைத்து தொங்கியவாறாக பயணம் செய்து வந்ததை அவதானிக்க முடிந்தது.


பிறசெய்திகள்