கொழும்பில் பெண் ஒருவர் 05 வயது சிறுவனை பாலத்தில் இருந்து கீழே வீசியுள்ளார்.
இச்சம்பவமானது இன்றையதினம் வத்தளை -மட்டக்குழி எமில்டன் பிரதான பாலத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் சிறுவனை வீசியதைதொடர்ந்து தானும் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதன்போது பொதுமக்கள் பெண்ணை தடுத்ததுடன் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அப்பெண்ணை கைது செய்ததுடன் சிறுவன் தன்னுடைய சிறுவன்தானா எனும் கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பாலத்தில் வீசப்பட்ட சிறுவனை அங்குள்ள பொது மக்களும் கடற்தொழிலாளர்களும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டும் இன்னும் சிறுவன் பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.