ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் ஷில்பா ஷெட்டி கோபமாக வாக்குவாதம் செய்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட புகாரில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
ராஜ்குந்த்ராவுக்கு எதிரான ஆதராங்களை சேகரித்துள்ள பொலிஸார் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜ் குந்த்ராவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்ற பொலிஸார், வீட்டில் சோதனை செய்தனர். அப்போது ஷில்பா ஷெட்டி தனது கணவரிடம் கத்தி சண்டை போட்டுள்ளார். அவரை பொலிஸ் குழு சமாதானப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ராஜ் குந்த்ராவை வீட்டில் பார்த்ததும் ஷில்பா ஷெட்டி நொறுங்கி போய்விட்டாராம். “நம்மிடம் எல்லாம் இருக்கிறது, இதையெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் என்ன” என்று சொல்லிக்கொண்டே அவர் கத்தியுள்ளார்.

வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது ஷில்பா ஷெட்டியையும் பொலிஸார் விசாரித்துள்ளனர். விசாரணையின் போதே கண்ணீர் விட்டு அழுதாராம் ஷில்பா ஷெட்டி.
விசாரணைக்கு பிறகும் ஷில்பா ஷெட்டி மிகவும் வருத்தப்பட்டு கவலையுடனே இருந்துள்ளார். அவரும் ராஜ் குந்த்ராவும் ஒரு பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஷில்பா ஷெட்டி பயங்கரமாக கத்தி கூச்சலிட்டுள்ளார்.
ஆபாச படம் எடுத்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் என்ன, ஏன் இந்த மாதிரி வேலையை செய்ய வேண்டும் என ராஜ் குந்த்ராவிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியதால் குற்றப்பிரிவு பொலிஸார் தலையிட்டு ஷில்பா ஷெட்டியை சமாதானப்படுத்தியுள்ளார்.
தனது கணவரை பார்த்ததும் கதறிய ஷில்பா ஷெட்டி, குடும்ப மானமே போய்விட்டது என்றும் தொழில் சம்மந்தமான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரே பல புராஜெக்ட்டுகளை விட்டுவிட்டதாகவும், இதனால் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ராஜ் குந்த்ராவின் ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி இதுவரை இரண்டு முறை பொலிஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளார். ஆனால் தொடர்பு இருப்பது போல் எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் ராஜ் குந்த்ரா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

