உத்தரப்பிரதேச பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் அரியானா மாநிலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பிய போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சாலையில் நின்றிருந்த பேருந்து மீது லொறியொன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.  இதன்போது 18 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *