திருகோணமலை மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை நேற்று (15) மாலை பெய்தது.
இதன் காரணமாக மாவட்டத்தில் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது
இதேவேளை திருகோணமலையில் வீசிய காற்றின் காரணமாக (பிரதான வீதி) விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்தில் இருந்த மரமொன்று வீதியோரமாக முறிந்து வீழ்ந்துள்ளது.
அத்துடன் கோமரங்கடவல- மொரவெவ பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருகின்ற வேலை தற்பொழுது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை மற்றும் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலைகளில் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் நோயாளர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரு வைத்தியசாலைகளிலும் மின்சாரம் துண்டிக்கப்படுகின்ற நேரத்தில் நோயாளர்கள் இருட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திணைக்கள அதிகாரிகள் ஜெனரேட்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.


பிறசெய்திகள்