3 இலட்சத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை -மேலும் 48 உயிரிழப்புகளும் பதிவு!

கொரோனா வைரஸினால் மேலும் 48 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் ஆண்கள் 28 பேரும் பெண்கள் 20 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 195ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் ஆயிரத்து 711 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 99 ஆயிரத்து 892ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 2 இலட்சத்து 70 ஆயிரத்து 356 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்த நிலையில், தொற்றுக்கு உள்ளான 25 ஆயிரத்து 389 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *