ஹிஷாலினியை வேலைக்கு அமர்த்திய தரகரின் வீட்டில் இன்று விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ஆராயும் பொலிஸ் குழு இன்றைய தினமும் டயகம பகுதியில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.

அதன்படி, குறித்த சிறுமியை வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தரகரின் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு நேற்று முன்தினம் டயகம பகுதிக்கு சென்றிருந்தது.

இதனையடுத்து, குறித்த பொலிஸ் குழு நேற்றைய தினம் சிறுமியின் தாய் மற்றும் தந்தை ஆகியோரிடத்தில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

இதேநேரம், டயகம பகுதியில் இருந்து இதற்கு முன்னர் அழைத்துவரப்பட்டு, ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட சிறுமிகளிடமும் குறித்த குழு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *