
ஹெந்தல,ஜுன் 15
ஹெந்தல மற்றும் மட்டக்குளிக்கு இடையில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு ஆற்றில் குதிக்க முயன்ற பெண் ஒருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் புதன்கிழமை (15) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பெண் தனது மகனை ஆற்றில் தள்ளி விட்டுள்ளார். பின்னர் தானும் குதிக்க முற்பட்டபோது, அந்தப் பகுதியால் சென்ற நபர் ஒருவர் அவரை தடுத்து பாதுகாத்துள்ளார்.
பின்னர் அந்தப் பெண் முதலில் ஹெந்தல பொலிஸ் சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தை அறிந்த மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த சிலர், ஹெந்தல பொலிஸ் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணைத் தாக்க முயற்சித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டு வத்தளை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
களனி கங்கையில் காணாமல்போன சிறுவனை கண்டு பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.