
கொழும்பு துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத ஒருதொகை மீன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது.
வெளிநாடு ஒன்றுக்கு சொந்தமான கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது, அந்த கப்பலின் 98 கொள்கலன்களில் இருந்த மீன் பழுதடைந்ததன் காரணமாக அவை கொழும்பு துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.
அதில் இருந்த 25 கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதாகவும், அவற்றை தகரப்பேணியில் அடைக்கவும் அல்லது கருவாட்டுக்காக உலர வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஊடக தகவல்கள் தெரிவித்திருந்தன.
தகரப்பேணியில் அடைக்கப்பட்ட மீன் மற்றும் கருவாட்டுக்கான விலைகள் அதிகரித்துள்ள காலக்கட்டத்தில் மனித பாவனைக்கு உதவாத மீன்கள் சந்தைக்கு விநியோகிக்க வாய்ப்புள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டிருந்தன.
பிற செய்திகள்