
நிபந்தனையை தளரத்துங்கள்சீனாவுடனான 1.5 பில்லியன் அமெரிக்க நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை திருத்துவதில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பரிமாற்ற ஏற்பாட்டிற்காக சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, இலங்கையிடம் மூன்று மாதங்களுக்கு போதுமான வெளிநாட்டு கையிருப்பு இல்லாதுபோனால், அதைப் பயன்படுத்த முடியாது.
இந்தநிலையில், இலங்கைக்கு தேவையான அளவு வெளிநாட்டு இருப்புக்கள் குறைவாக இருப்பதால் இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.