எதிர்வரும் பெரும்போகத்தில், நாட்டிற்கு விநியோகிப்பதற்கு தேவையான முழுமையான அரிசி அறுவடையின் ஊடாக கிடைக்கப்பெறுமாயின், அரிசியை இறக்குமதி செய்வதற்கான அவசியம் இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மில்கோ நிறுவனத்திற்கு நேற்று கண்காணிப்பை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு சிறுபோகத்தில் கிடைக்கப்பெறும் அரிசையை களஞ்சியப்படுத்துவதற்காக, தற்போது களஞ்சியசாலைகளில் உள்ள அரிசியை சந்தைகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 40,000பெறுமதியான யூரியா உர மூடையொன்றை 10,000 ரூபாவுக்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய கடன் திட்டத்தின் கீழ் ஓமானில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ள யூரியா உரம் இந்த மாதத்தின் இறுதி அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் கிடைக்கப்பெறவுள்ளது.
40,000 மெட்ரிக் டன் அளவான யூரியா உரமே இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளது.
பிற செய்திகள்