குளிரூட்டி பழுதடைந்ததால் சடலங்களைப் பேண முடியாத நிலையில் அரச வைத்தியசாலை!

சாவகச்சேரி ஆதார மருத்துவமனை உடற்கூற்றுப் பரிசோதனை அறையிலுள்ள குளிரூட்டிகள் பழுதடைந்துள்ளதால் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும் சடலங்கள் குளிரூட்டியில் வைத்துப் பாதுகாக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.

இதனால் சடலங்களை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு, விலையுயர்வால் யாழிலிருந்து தென்மராட்சிப் பிரதேசத்துக்கு சடலங்களைக் கொண்டு வருவதற்கு அதிகரித்த வாகனக் கட்டணம் அறவிடப்படுகின்றது.

ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இறப்புச்சடங்கு நடத்த முடியாமல் தடுமாறும் குடும்பங்கள், இவ்வாறான மேலதிகச் செலவை ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது என்று கவலை தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *