பொன்னாலை-வட்டுக்கோட்டை வீதிப்புனரமைப்பு பணிகளை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குரிய பொன்னாலை – பருத்தித்துறை பிரதான வீதியில் பொன்னாலை சந்தி வட்டுக்கோட்டை சந்தி வரையான வீதியை உடனடியாக மீள புனரமைத்துத் தருமாறு யாழ் . மாவட்டச்செயலருக்கு காரைநகர் பிரதேசசபைத் தவிசாளரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

இது தொடர்பில் காரைநகர் பிரதேசசபை தவிசாளரால் யாழ் . மாவட்டச் செயலருக்கு அனுப்பிவைத்த கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

குறித்த கடிதத்தில்,

காரைநகர் பிரதேச மக்கள் அனைவரும் பெரும்பாலும் பொன்னாலை – பருத்தித்துறை வீதியூடாகவே போக்குவரத்து செய்கின்றனர் . குறித்த வீதியானது மீள் புரைமைப்புப் பணி இடம்பெற்று ஒரு சில சிறிய பாலங்கள் மீள அமைக்கப்பட்டன .

முழுமையாக சீரமைப்பின்றி காணப்பட்ட இந்த வீதி தற்போது கற்கள் , கம்பிகள் , குழிகள் என்பவற்றுடன் மிக ஆபத்தாகக் காணப்படுகின்றது .

குறித்த வீதியில் போக்குவரத்து முற்றாக செய்ய முடியாத நிலையில் சகல திணைக்கள அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் .

வீதியில் உரிய காலத்தில் புனரமைப்பு இடம்பெறும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் அது தடைப்பட்டுள்ளது . எனவே குறித்த வீதிக்கு மக்கள் சிரமமின்றி செல்லக்கூடிய வகையில் உடனடியாக மீள்புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யுமாறும் தாங்கள் முன்னெடுக்கும் செயற்பாட்டை எமது சபைக்கும் தெரியப்படுத்துமாறும் தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *