26 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபனின் தாயார் காலமானார்.
இல:88, கலாசாலை வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் வசித்து வந்த விக்கினேஸ்வரநாதன் – வாகீஸ்வரி (கண்ணாடி அம்மா) தனது 78வது வயதில் நேற்று (15) புதன் கிழமை இரவு 7.00 மணியளவில் காலமானார்.
மண்ணறைக்குப் போவதற்குள் தன் பிள்ளைக்கு ஒரு பிடி சோறூட்ட வழிகாட்டையா என நல்லூரானிடம் வேண்டிக்கொண்டிருந்த தாய், இதுவரை தன் பிள்ளையின் திருமுகம் காணாமலே விண்ணுலகை ஏகிவிட்டார் என உறவினர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதியாக கடந்த 26 ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் இலங்கை மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்வத்தின் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்