இலங்கைக்கு புதிதாக 120 மில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு அமெரிக்கா அனுமதி!

இலங்கைக்கு புதிதாக 120 மில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் U.S. International Development Finance Corporation (DFC) இந்த அனுமதியினை வழங்கியுள்ளது.

சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்காக இதில் 100 மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளது.

மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு, பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்காக 15 மில்லியன் டொலர் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த கடன் தொகையில் 5 மில்லியன் டொலர் உணவு உற்பத்தி நிறுவனமொன்றுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *