சடுதியாக குறைவடைந்த பேக்கரி உற்பத்திகளின் விற்பனை; விலை மீண்டும் அதிகரிப்பு!

பேக்கரி உற்பத்திகளின் விற்பனை சடுதியாக குறைவடைந்துள்ளதால் எதிர்காலத்தில் அவற்றின் விலையில் ஏற்படும் உயிர்வினை தடுக்க முடியாது என இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது, பாண் மற்றும் பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களை மக்கள் பெற்றுக் கொள்வது குறைந்துவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள சுமார் 3500 பேக்கரிகள் தற்போது மூடப்பட்டுள்ளன. பேக்கரி உற்பத்தி தொழிலுடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை பார்த்து வந்த சுமார் இரண்டு இலட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 50 சதவீத பேக்கரிகள் செயல்படாமல் உள்ளன.

பேக்கரி உரிமையாளர்கள் வங்கிகளில் பெற்ற கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். பேக்கரி உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத் தருமாறு பிரதமருக்கு இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பேக்கரி பொருட்களின் விற்பனையும் சரிவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் பணிஸ் ஒன்றின் விலை ரூ.100 ஆக உயரும் என்பது தவிர்க்க முடியாதது.

பெட்ரோல் நெருக்கடியால் 90 சதவீத சூன் பான் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பேக்கரி பொருட்களை விநியோகம் செய்யும் லொறிகள் 5 முதல் 6 நாட்கள் வரை பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார். இதனால், தினசரி பேக்கரி பொருட்களின் விநியோகம் தடைபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *