அடுப்புக்கட்டுக்கு கீழ் பெற்றோல் ‘தீக்குச்சியை அணைக்காமல் கீழே போட்டு பரிதாபமாக பலியான பெண் – யாழில் சோகம்

அடுப்புக்கட்டுக்கு கீழ் பெற்றோல் போத்தலைக் கணவன் வைத்ததை அறிந்திராத குறித்த பெண் தீக்குச்சியை அணைக்காமல் கீழே போட்டுள்ளார். இதனால் அவர் எரிகாயங்களுக்குள்ளானார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கட்டைக்காடு, முள்ளியானைச் சேர்ந்த யோகேஸ்வரன் பாலரஞ்சிதா (வயது- 32) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார்.

கடந்த 22ஆம் திகதி மதியம் நின்று சமைக்கும் விறகு அடுப்பில் தேநீர் வைப்பதற்கு மண்ணெண்ணைய் ஊற்றி நெருப்பை வைத்துவிட்டு தீக்குச்சியை கீழே போட்டுள்ளார்.

Advertisement

அடுப்புக்கட்டுக்கு கீழே கணவர் பெற்றோல் போத்தலை வைத்திருந்தமை தெரியாமல் குடும்பப் பெண் நெருப்பு குச்சை போட்டமையால் ஏற்பட்ட தீவிபத்தில் அவர் சிக்கியுள்ளார்.

உடம்பில் தீப்பற்றியதால் அவர் கிணற்றுக்குள் விழ்ந்துள்ளார்.

எரிகாயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

5 நாள்கள் முன்னெடுக்க சிகிச்சை பயனின்றி குடும்பப் பெண் இன்று காலை உயிரிழந்தார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இன்று மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *