அமரகீர்த்தி அத்துகோரல கொலை சம்பவம் – இதுவரை 31 சந்தேகநபர்கள் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கட்டுலந்த தோட்டம் – எலக்கந்த பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய தனியார் நிறுவனமொன்றின் சிரேஷ்ட விற்பனை அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சந்தேக நபரை இன்று (வியாழக்கிழமை) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தியின் படுகொலை தொடர்பாக இதுவரை 31 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *