அவுஸ்ரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? இரண்டாவது நாள் போட்டி இன்று!

இலங்கை மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போட்டியானது இன்று (வியாழக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு கண்டி- பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தசுன் சானகவும், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கு ஆரோன் பின்ஞ்சும் தலைமை தாங்கவுள்ளனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

ஆகவே இன்றைய போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *