
திருமலை, ஜுன் 16
எரிபொருளை சட்டவிரோதமாக கொண்டுசென்ற மூன்று பேர் திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரவெவ பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு பாரவூர்தியில் டீசல் மற்றும் பெற்றோலை கொண்டு சென்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடம் இருந்து 1,950 லீற்றர் டீசல் மற்றும் 120 லீற்றர் பெற்றோல் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதானவர்கள், கொஸ்கொட, இரத்தினபுரி கேகாலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.