
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
முச்சக்கர வண்டிகள் உட்பட வாடகை வண்டிகளை பயன்படுத்தி அன்றாம் உழைத்து வரும் பலர் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இரவு, பகல் என எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
இவ்வாறு காத்திருப்போர் தமது சோர்வையும் அழுத்தத்தையும் தவிர்ப்பதற்காக கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது.
இந்த நிலையில், கொழும்பு 10 மருதானை மொய்தீன் பள்ளிவாசல் வீதியில் தனது முச்சக்கர வண்டிக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள காத்திருந்த ஒருவர், பாடல் ஒன்றுக்கு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
வீடியோவை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் 👇
பிற செய்திகள்




