
யாழ், ஜுன் 16
நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பினால் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு எதிர்வரும் 2022.06.24 ஆம் திகதி சைவம், தமிழ், பண்பாட்டு கலாசார விழுமியங்கள் தொடர்பான பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1. இப்போட்டியானது யாழ்ப்பாண கல்வி வலயப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடையே நடைபெறும்.
2. பிரிவுகள் – தரம் 6, 7, 8 – கனிஷ்ட பிரிவு – 100 சொற்கள்
தரம் 9, 10, 11 – மத்திய பிரிவு – 150 சொற்கள்
தரம் 12, 13 – மேற்பிரிவு – 200 சொற்கள்
3. கட்டுரை தலைப்புக்கள் சமய பண்பாட்டு விழுமியங்கள், மனித வாழ்வின் நெறிமுறைகள், மாணவர்கள் வளர்க்கவேண்டிய திறமைகள், பண்புகள் மற்றும் நல்லூரானின் பெருங்கருணை சார்ந்து அமையப்பெறும். மாணவர்களின் கட்டுரைக்கான தலையங்கங்கள் போட்டிக்கு முதல் நாள் மதியத்தின் பின்னர் உரிய பாடசாலை அதிபர்கள் ஊடாக வழங்கப்படும்.
4. பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவன மாணவர்கள் பங்குபற்றும் திறந்த பிரிவு போட்டிகள் 250 சொற்களை கொண்டதாக அமையும் . திறந்த பிரிவில் பங்குகொள்ள விரும்புபவர்கள் 22.06.2022 ம் திகதி புதன்கிழமை மாலை 03 மணிக்கு முன்னதாக [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது பதிவை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும் திறந்த பிரிவில் பங்குபற்றும் மாணவர்கள் தமது மாணவர் பதிவை உறுதிப்படுத்திக்கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
5. போட்டி 24.06.2022 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு பாடசாலைகளிலும், திறந்த பிரிவுக்கு 24.06.2022 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு யாஃ நல்லூர் மங்கயற்கரசி வித்தியாலயத்திலும் நடைபெறும்.
6. ஓவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்கள் பெறுவோருக்கு பெறுமதியான பரிசில்களும் அடுத்த ஏழு இடங்களைப் பெறுவோருக்கு கௌரவ பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
7. யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே சமயம் சார்ந்த நிறந்தீட்டல் போட்டி 26.06.2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிக்கு அறநெறிப் பாடசாலைகளிலேயே நடைபெறும்.