
கொழும்பு, ஜுன் 16
பேக்கரி உற்பத்திகளின் விற்பனை சடுதியாக குறைவடைந்துள்ளதால் எதிர்காலத்தில் அவற்றின் விலை அதிகரிப்பை தடுக்க முடியாது என இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது, பாண் மற்றும் பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களை மக்கள் பெற்றுக் கொள்வது குறைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள சுமார் 3,500 பேக்கரிகள் தற்போது மூடப்பட்டுள்ளன. பேக்கரி உற்பத்தி தொழிலுடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் புரிந்துவந்த சுமார் இரண்டு இலட்சம் பேர் வேலையை இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




