
கொழும்பு,ஜுன் 16
நாட்டின் நீர் பாவனையாளர்களால் சுமார் 750 கோடி ரூபாவை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளும் குழாய் நீர் கட்டணத்தை செலுத்த தவறிய பட்டியில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதிக்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளுக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, 85 அரசியல்வாதிகள் தத்தமது வீடுகளில் பயன்படுத்திய தண்ணீருக்கான கட்டணத் தொகையான ஏறக்குறைய 2 கோடி மில்லியன் ரூபாவை செலுத்தத் தவறியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.