
பதுளை,ஜுன் 16
இரண்டரை கிலோ மலைக்குருவி கூடுகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் பத்து இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான மலைக்குருவி கூடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் பதுளை பதுளுபிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாற்பது மற்றும் ஐம்பது வயதுகளுக்கு இடைப்பட்ட பதுளை தெய்யனேவலை மற்றும் சொரணதொட்ட ஆகிய பகுதிகளை வதிவிடமாகக் கொண்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.