எரிபொருள் பிரச்சினைக்கு கம்மன்பிலவின் 10 தீர்வுகள்

கொழும்பு,ஜுன் 16

எரிபொருள் பிரச்சினைக்கான 10 அம்ச குறுகிய கால தீர்வுகளை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வலுசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில முன்வைத்துள்ளார்.

செய்தியாளர் மாநாட்டில் இது குறித்து பேசிய அவர், கடந்த ஜனவரி மாதம் இந்த யோசனைகளை அமைச்சரவையில் தான் சமர்ப்பித்ததாகவும் ஆனால், அது அமல்படுத்தப்படவில்லை எனவும் கூறினார்.

இந்நிலையில், தற்போது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இந்த யோசனைகளை முன்வைப்பதாக அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் வலுசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில முன்வைத்துள்ள யோசனைகள் பின்வருமாறு,

  • 2000 சிசி க்கு மேற்பட்ட என்ஜின் கொண்ட அனைத்து கார்கள், ஜீப்களை இயக்குவதற்கு தற்காலிகத் தடை.
  • குறுகிய தூர பயணங்களுக்கு ஆசனங்கள் அற்ற பயணிகள் பஸ்களை அறிமுகப்படுத்துதல். இதன் மூலம் அதிக பயணிகளை ஏற்றலாம்.
    துவிச்சக்கரவண்டி பாவனையை ஊக்குவித்தல்
  • வாரத்துக்கு நான்கு நாள் வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தல் அல்லது 3 நாட்கள் வேலைத்தளத்திலும், 2 நாட்கள் வீட்டிலும் வேலை செய்தல்.
  • அரசாங்க அலுவலகங்களுக்கு மக்கள் பயணம் செய்வதை தவிர்ப்பதற்காக அனைத்து அரச சேவைகளையும் டிஜிட்டல் மயப்படுத்துதல்.
  • அரச ஊழியர்களை அவர்களின் வீடுகளுக்கு அருகிலுள்ள அலுவலகங்களுக்கு இடம்மாற்றுதல்.
  • பாடசாலை கல்விச் செயற்பாடுகளை வாரத்துக்கு 3 நாட்களுக்கு மட்டுப்படுத்துதல். ஏனைய இரு நாட்கள் இணைய வழியில் வகுப்புகளை நடத்துதல்.
  • பாடசாலைக்கு சமுகம் அளிக்க முடியாத மாணவர்களுக்கு ஸூம் அல்லது இணைய வழியில் வகுப்பில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு வழங்கல்
  • அனைத்து தனியார் நிறுவனங்களும் சந்திப்புகளை ஸூம் அல்லது இணைய வழியில் நடத்துதல்.
  • போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, நெகிழ்வுத் தன்மையான வேலை நேரத்தை வழங்குதல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *