இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி பதவியிலிருந்து ஜயசூரிய நீக்கம்

கொழும்பு,ஜுன் 16

இராணுவ புலனாய்வு படையணியின் பிரதானியாக செயற்பட்டு வந்த மேஜர் ஜெனரல் ரொபின் ஜயசூரிய அப்பதவியிலிருந்து சடுதியாக நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக இராணுவ புலனாய்வு பிரதானியாக பிரிகேடியர் சந்திக மஹதந்தில நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவித்தன.

இதற்கான நடவடிக்கைகள், புதிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேயினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இராணுவ புலனாய்வுப் பிரதானியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரால் ரொபின் ஜயசூரிய, கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் தென் பிராந்திய பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *