
கொழும்பு,ஜுன் 16
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு 216 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.4 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டது.
இதனால் போட்டி சில மணிநேரம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், டக்வத் லூயில் முறைமைக்கு அமைய போட்டி 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அவுஸ்திரேலிய அணிக்கு 216 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணிசார்பில் அதிகபடியாக குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்களையும், தசுன் சானக்க 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.