
எரிபொருள் விநியோகத் திட்டத்தை இலகுபடுத்த, எதிர்வரும் ஜுலை மாதம் முதல் புதிய முறைமையொன்றை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எரிபொருளை Card முறைமையின் அடிப்படையில் விநியோகிக்கும் வகையிலேயே, இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பிற செய்திகள்