
கொழும்பு,ஜுன் 16
இலங்கைக்கு எரிபொருளுடன் நேற்றைய தினம் வருகை தந்துள்ளது இறுதி கப்பலாகும் என்றும் , இதன் பின்னர் எரிபொருள் கப்பல் வராது என்றும் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.
இன்று (16) நாட்டை வந்தடைந்த கப்பல் இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் வந்த இறுதி கப்பலாகும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் இன்று (16) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தற்போது எமக்கு கடனுக்கு எரிபொருளை வழங்குவதற்கு ஏனைய நாடுகள் தயக்கம் காண்பிக்கின்றன. ரஷ்ய தூதுவர் இவ்விடயத்தில் தலையிட்டு உதவ முற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
பெற்றோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்வதற்கு இரு நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.