“நீங்கள்…

“நீங்கள் எனது குரலை அடக்கலாமே தவிர என் குரல்கள் தாங்கிவரும் கொள்கையை ஒருபோதும் அடக்கமுடியாது” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஷ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நான் நாட்டிலில்லாத தருணத்தில் எனது வீட்டிற்குச் சென்று என்னை விசாரிக்க வேண்டுமென்று அச்சுறுத்துவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட செயற்பாடு 

”சர்வதேச கருத்தமர்வு ஒன்றில் பங்கேற்பதற்காகவே கொசோவா, சிம்பாப்வே, சிரியா மற்றும் ஜோர்ஜியா நாட்டுப் பிரதிநிதிகளுடன் சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ளேன்.

உங்களது செயற்பாடு தொடர்பாக இங்கும் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளேன். இதனால் உங்கள் நாட்டின் நற்பெயருக்கே (நற்பெயர் இருந்தால்) பாதிப்பேற்படும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

இத்தகைய ஒரு நாட்டிற்குத் திரும்பச்செல்லப் போகின்றீர்களா? இங்கு ஏதாவதொரு நாட்டிடம் புகலிடக் கோரிக்கையை முன்வைக்கலாமே” என்று இங்குள்ளவர்கள் கூறுகின்றார்கள்.

ஆனால் நான் நிச்சயம் விரைவில் இலங்கைக்கு திரும்புவேன். உங்களது விசாரணைகளுக்கு முகங்கொடுப்பேன். ஏனென்றால் எனது கைகள் சுத்தமானவை. எனது செயற்பாடுகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவை.

நீங்கள் எனது குரலை அடக்கலாமே தவிர என் குரல்கள் தாங்கிவரும் கொள்கையை ஒருபோதும் அடக்கமுடியாது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

நன்றி -tamilwin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *