யாழ்ப்பாணம்,ஜுன் 17
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தங்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசல் காணப்பட்டாலும் உரிமையாளர்கள் அதனை விநியோகிக்க மறுக்கிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
வியாழக்கிழமை இரவு தாவடியிலுள்ள எரிபொருளுள் நிலையத்தில் தேவையான எரிபொருட்கள் கையிலிருந்தும் ஏன் தருவதற்கு மறுக்கிறார்கள் என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஏன் பெற்றோல் அடிக்கவில்லை என மக்கள் கேள்வி எழுப்ப, அடிக்கும் உரிமை தங்களுக்கு வழங்கப்படிவில்லை என ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.
பெரும் அசௌகரியங்களை சந்தித்து வரும் நாட்டு மக்கள் இவ்வகையானோரின் செயற்பாட்டால் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

