
சீனா சர்வதேச சட்ட வரைமுறைகளை மீறி செயற்படுகின்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த காலங்களில் சீனா சர்வதேச விதிமுறைகளை மதித்து வந்தமையை அவதானித்த அமெரிக்கா சீனாவுடனான உறவினை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள விரும்புவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், தற்போது சீனா முரணாண விதத்தில் தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க செயலாளர் அன்ரனி பிலிங்டன் கருத்து தெரிவிக்கும் போது, “பைடனின் அரசு எந்த விடயத்திற்கும் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டு வரும் ஒரு அரசு ஆகும்.
இதன் அடிப்படையில் சீனாவின் தற்போதைய போக்கானது சர்வதேச விதிமுறைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்பாட்டை அரங்கேற்றுவதாக தெரிகின்றது.
தற்போதைய சீனாவின் போக்கு, நாடுகளுக்கிடையிலான உறவினை கட்டியெழுப்புவதில் ஆரோக்கியமான கட்டமைப்பு இல்லலை. சீனா பக்க சார்பாக செயற்படவும் தன்னாதிக்கத்தை வெளிப்படுத்தவும் முனைகின்றது.
இது சர்வதேச விதிமுறைகளுக்கு மிகவும் எதிரான ஆபத்தை விளைவிக்கும்”. என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.