நெடுங்கேணியில் மர கடத்தல் முயற்சி முறியடிப்பு

நெடுங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடு காட்டு பகுதியில் மர கடத்தல் முயற்சி வட்டார வனவள அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

நைனாமடுவில் ஒதுக்கப்பட்ட காட்டுப்பகுதியில் நேற்று இரவு மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக வட்டார வனவள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, வட்டார வனவள அதிகாரி சமரதுங்க தலைமையிலான உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தேடுதலில் 6 லட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் காட்டுப்பகுதியில் வெட்டப்பட்டு ஏற்றுவதற்கு தயாராக காணப்பட்டது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வட்டார வனவள அலுவலக அதிகாரிகளின் வருகையையடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில் மரக் குற்றிகளை வட்டார வனவள அலுவலகத்திற்கு ஏற்றி சென்றுள்ளனர். இது குறித்து மேலதிக விசாரணைகள் நெடுங்கேணி பொலிசாருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறித்த மர குற்றிகளையும், டிப்பர் வாகனத்தையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *