விலை அதிகரிக்கும் வரை எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்படாது!

விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்படாது என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரின் கூற்றுப்படி, எரிபொருள் விலை அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 24ம் திகதி நடைமுறைக்கு வர வேண்டும்.

இறுதியாக எரிபொருள் விலை அதிகரிப்பு மே 24ம் திகதி மேற்கொள்ளப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார்.

மண்ணெண்ணெய் லீற்றருக்கு 210 ரூபா ரூபாவாகவும், இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை74 ரூபாவாலும், 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 78 ரூபாவாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 56 ரூபாவாலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 65 ரூபாவாலும், அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் 24ம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல்

இதனிடையே, நாட்டின் பொருளாதாரம் சீராக இயங்க தினமும் 6,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 5,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் தேவைப்படுகிறது.

இதன்படி, 5,500 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 11,000 மெட்ரிக் தொன் டீசல் தற்போது இலங்கை பெட்ரோல் கூட்டுதாபனத்தில் சேமிப்பு வசதிகளில் இருப்பதாக கூறப்படுகின்றது.

மேலும் நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் மெடரிக் தொன் எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *