போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட திடீர் சுற்றி வலைப்பின் போது கிண்ணியாவில் இருவர் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று 27)இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா இடிமன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 2 கிராம் ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் தோப்பூர் பகுதியை சேர்ந்த வயது (27,32) எனவும் ஒருவர் குடும்பஸ்தர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தோப்பூரில் இருந்து கிண்ணியாவுக்கு குறித்த போதை பொருளை கொள்வனவு செய்து விட்டு திரும்பும் போதே இக்கைது இடம் பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரையும் கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.