நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
இதேவேளை எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து எரிபொருட்களை கொள்கலன்களில் நிரப்பும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் அம்பலாங்கொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் திடீரென வாகனத்தில் ஏற்றி கொண்டு வரப்பட்ட மீன்பிடிக் கப்பலால் சிறிது நேரம் குழப்பமான நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கப்பலும் வீதியில் பயணிக்க வேண்டிய நிலையில் நாடு சென்று கொண்டிருப்பதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்




