விமலுக்கு எதிரான குற்றப் பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவருக்கு வாசித்து காட்டப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் 2010 -2015 ஆம் ஆண்டு வரை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தனது சம்பளம் மற்றும் சொத்துக்கள் மூலம் சம்பாதிக்க முடியாத அளவில் 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சம்பாதித்தமை சம்பந்தமாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையே வாசித்து காட்டப்பட்டள்ளமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சட்ட மா அதிபர் திணைக்களம் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றப்பத்திரிகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு தான் குற்றவாளி அல்ல நிரபராதி என விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் தெரிவித்தள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *