இலங்கையில் முடிவின்றி தொடரும் வரிசைகள்! இன்றைய நிலவரம்

எரிவாயு மற்றும் எரிபொருள் கொள்வனவுக்காக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் இன்றும் வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்

அத்துடன் நாட்டின் பல பாகங்களில் மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது

இதன்காரணமாக பிரதான வீதிகள் பலவற்றில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பிரதேசத்தில் மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி பிரதேச மக்கள் இன்று வீதிமறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம், நுவரெலிய பதுளை வீதிக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் பிரதேசத்தில் எரிபொருள் நிலையங்களில் டீசல் பெற்றுக்கொள்வதற்காக வாகனங்கள் இரண்டு கிலோமீற்றருக்கும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *