
கொழும்பு, ஜுன் 17
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள வெளிநாட்டு விலங்குகளை பின்னவல மிருகக்காட்சி சாலைக்கு இடம் மாற்றும் வேலைத்திட்டத்தினை தேசிய விலங்கியல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அத்துடன், பின்னவல மற்றும் ரிதியகம மிருகக் காட்சிசாலைகளின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனிடையே, மிருகக்காட்சிசாலைகளில் விலங்குகளுக்கு உணவளிப்பதற்கு நிதி இன்மையினால் , விலங்குகளை பராமரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள அனுசரணை திட்டத்திற்கு பெருமளவானவர்கள் பங்களிப்பு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், ரிதியகம பகுதியில் விலங்குகளுக்கான புதிய உணவுப் பயிர்ச்செய்கையினை ஆரம்பிப்பதற்கு தேசிய விலங்கியல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.




