ஆசிரியர்களை…

ஆசிரியர்களை தமது வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளில் பணிக்கமர்த்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து சிக்கல்களை தவிர்க்கும் யோசனையின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளதுடன் மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு இதற்கான அதிகாரத்தை வழங்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்று நிரூபமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *