
அண்மையில் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46 இன் கீழ் 1 இணை இலங்கை அரசாங்கம் மற்றும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் உண்மைக்கு மாறான பல தகவல்களை வழங்கி ”மரண வீட்டில் திட்டமிட்டு செயற்படும் திருடன் போல” மக்களுக்கு பாதகமாக மாற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
இதனை தடுத்து நிறுத்துவதற்கு விழிப்புணர்வு எதிர்ப்பு போராட்டத்தினை நடாத்த உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார் .
இன்றைய தினம் யாழில் உள்ள ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார் .
அவர் மேலும் குறிப்பிடுகையில் ;
நாட்டின் இக்கட்டான சூழ்நிலையிலும் அரசாங்கம் தேசிய ரீதியிலும் ,சர்வதேச ரீதியிலும் தமிழர்களின் இருப்புக்களுக்கு எதிராக சிங்கள,பௌத்த மேலாதிக்ககத்தின் அடிப்படையில் செய்து வருகின்றது.
அந்தவகையில் மக்களுக்கு இதனை விழிப்பூட்டும் வகையில் சிவில் அமைப்புக்கள் இணைந்து முன்னாயத்த நடவடிக்கையாக விழிப்பூட்டும் போராட்டம் ஒன்றிணை நடாத்த உள்ளது .
இந்நிலையில் புரையோடி இருக்கின்ற தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு எந்தவிதமான தீர்வும் வழங்காமல் எந்த நோக்கமும் இன்றி மூடி மறைக்கும் செயற்பாட்டில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது .
இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலினை செய்துகொண்டு போகாமல் தடுக்க வேண்டியது சிவில் அமைப்புக்களின் பொறுப்பாகும் என தெரிவித்தார்.
அதேவேளை அண்மையில் மனித உரிமைப் பேரவையில் 46 இன் கீழ் 1 நிறைவேற்றப்பட்டது . இதில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை நீத்துப்போகும் வகையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் உண்மைக்கு மாறான பல தகவல்களை வழங்கி மக்களுக்கு பாதகமாக மாற்றும் செயற்பாடுகளில் மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
இதில் பயங்கரவாத தடைச்சட்டடம் நீக்கப்பட்டது ,92 % காணிகள் கையளிக்கப்பட்டு விட்டன ,உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரணைகள் முடிந்து விடடன போன்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி சர்தேச ரீதியில் நல்ல பிள்ளைகளுக்கு நடிக்கிறார்கள் .
நாங்கள் கோரியது இனப்பிரச்சனைகளுக்கான தீர்வு ,குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மனித பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46 இன் கீழ் 1 இல் விரசாணைக்கான பொறிமுறையேயாகும் .
மரண வீட்டில் திட்டமிட்டு செயற்படும் திருடன் போலவே தமிழ் மக்களுக்கு எதிராக இந்த அரசாங்கமும்,பீரிஸும் செயற்படுகிறார்கள் .ஆகவே தமிழ் மக்கள் மனைவரும் தொடர்ந்து வலியுறுத்தி ஐ .நாவிடம் கொண்டு சென்று குற்றவவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கின்ற முயற்சிகளில் பாடுபட வேண்டும்.
எனவே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ் கைலாசப் பிள்ளையார் ஆலயம் முன்றலில் காலை 10 மணிக்கு விழிப்புணர்வு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட இருக்கின்றோம்.
குரலற்றவர்களின் குரலமைப்பு ,சமூக விஞ்ஞான ஆய்வு அமைப்பு ,அகில இலங்கை தொழிலார்களின் கூட்டடமைப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் ஈழத்தவர் அமைப்பு போன்ற இன்னும் பல சமூக அமைப்புகள் சேர்ந்து விழிப்புணர்வு எதிர்ப்பு போராட்டத்தினை நடாத்த இருக்கின்றோம் .இளைஞர்,யுவதிகள் தங்களின் பொறுப்பினை உணர்ந்து கலந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம். .
மேலும் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபனின் தாயாரின் இறுதிக்கிரியையில் பங்கெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த போராட்டத்தில் கீழ் வரும் பல கோரிக்கைகளை முன்வைத்து நடாத்த உள்ளோம் .
- கோரிக்கைகள்
- ஐ.நா. மனித உரிமை அலுவலகம் முன்னெடுக்கும் சாட்சியப் பொறிமுறை தேவையற்றது என்று இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்து அதை மூடிவிடுமாறு கோரியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
- ஜீ.எல்.பீரிஸ் ஜெனீவாவில் 50 ஆம் கூட்டத்தொடரில் ஆற்றிய உரை உண்மைக்குப் புறம்பானது. சர்வதேசக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் அதை முற்றாக நிராகரிக்கிறோம்.
- 2021 ஜனவரி 15 ஆம் திகதியன்று அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் குடிசார் அமைப்புகளும் இணைந்து ஒற்றுமையாகக் கோரியிருந்தது போல, சிரியாவுக்கு ஏற்படுத்தப்பட்டதைப் போல முற்றிலும் சுயாதீனமான, சர்வதேச, விசாரணைப் பொறிமுறை ஒன்று நேரடியாக ஐ.நா. பொதுச்சபையின் கிளையமைப்பாக உருவாக்கப்படவேண்டும்.
- ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்சலேற் அம்மையாரின் பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவதற்கு முன்னதாக அவரது அலுவலகம் முன்னெடுக்கும் சாட்சியப் பொறிமுறையை மேலும் கனதியானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் தரமுயர்த்தவேண்டும். அதற்கேற்ற நிதி உதவியை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும்.
- இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைப் போக்க நிதி உதவி செய்ய முன்வரும் நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் தீவில், குறிப்பாக வடக்கு-கிழக்கில், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைப் போக்கி, ஈழத்தமிழர் தேசத்துக்கும் தமிழ்பேசுவோர் உள்ளிட்ட எந்த ஏனைய மக்களுக்கும் எதிரான இன அழிப்போ ஒடுக்குமுறையோ தொடராத வகையில் அரசியல் உறுதிநிலையைத் தீவில் ஏற்படுத்தியே உதவியைச் செய்ய முன்வரவேண்டும். ஏற்கனவே சமாதானப் பேச்சுக்கள் குழப்பப்பட்டதற்கும், சுனாமி அனர்த்தத்தின் பின்னான மீள்கட்டுமானப் பொறிமுறை மறுக்கப்பட்டது போன்றவற்றில் இருந்து கற்ற பாடங்களோடு அரசியல் உறுதிநிலை தொடர்பான காத்திரமான நகர்வுகள் இடம்பெறவேண்டும்.
- இலங்கைத் தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களும் மாந்தத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் மட்டுமல்ல,
எழுபது வருடங்களாக இலங்கை அரசு ஈழத்தமிழர் தேசத்துக்கு எதிராகப் புரிந்துவருகின்ற குற்றங்களுக்கெல்லாம் குற்றமாகிய இன அழிப்பு தொடர்பான உண்மையைக் கண்டறிந்து, சர்வதேச சுயாதீன விசாரணைக்கு உள்ளாக்குமாறு ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகம் தகுந்த ஆணை வழங்கவேண்டும்
. - இன அழிப்புத் தொடர்பான தனிநபர் குற்றவியற் பொறுப்பையும் இலங்கை அரசின் பொறுப்பையும் இன அழிப்பைத் தண்டித்துத் தடுக்கும் 1948 சாசனத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்கவேண்டும்
- ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபைக்கும் அப்பால், மனித உரிமை ஆணையாளரும் ஐ.நா. செயலாளர் நாயகமும் நேரடியாக இன அழிப்பு உள்ளிட்ட அனைத்து சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை ஐ.நா. அவையின் அதியுயர் மட்டத்தில் பாரப்படுத்திக் கையாளவேண்டும்.
- தமிழ் அரசியற் கைதிகள் அனைவரும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்படவேண்டும்.
- வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய பொறுப்புக்கூறல் சர்வதேச மட்டத்தில் கையாளப்படவேண்டும்.
- சிங்களப் பெரும்பான்மை ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்குக் கிழக்கிலிருந்து விலக்கிக்கொள்ளப்படவேண்டும்.
- தமிழர் தாயகத்தின் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள், மரபுரிமையை வரலாற்று உண்மைக்குப் புறம்பாக சிங்கள-பௌத்தமாக திரிபுபடுத்துவதை இனிமேலும் நடைபெறாத வண்ணம் நிறுத்த சர்வதேச சமூகம் முன்வரவேண்டும். முழுமையான மீள்குடியேற்றமும் காணி உரிமைகளும் தமிழ்பேசும் மக்களுக்கு உறுதிப்படுத்தப்படவேண்டும்.
- இலங்கையின் அரசாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிப் போராடும் தென்னிலங்கை மக்கள், தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகமான வடக்கு-கிழக்கை உரிய முறையில் அங்கீகரிக்கவும், அரசியல் வேணவாவைப் புரிந்து, அங்கீகரித்து, தேசிய இனச் சிக்கலுக்கு ஏதுவான அரசியலமைப்பு மாற்றங்களையும் ஒரு சேரச் சேர்த்துக் கோரவேண்டும். தமிழ் மக்களின் நினைவுத்திற உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும். ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நீண்டகாலமாக இனப் பிரச்சனையைத் தீர்க்காததன் ஒரு பக்க விளைவே என்பதைப் புரிந்துசெயற்பட முன்வரவேண்டும் என்றார்.
பிறசெய்திகள்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பசில்!
யாழ் மக்களுக்கு அரிசி இலவசம்- விசேட அறிவிப்பு !
வவுனியாவில் காணி மோசடி தீவிரம்!
வீதிக்கு வந்த கப்பலும் விழி பிதுங்கிய மக்களும்!
உலகவங்கியின் நிதிப்பங்களிப்பில் யாழில் நிர்மாணிக்கப்பட்ட குளங்கள் திறப்பு!

