தலைமன்னார் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் அதிரடியாக கைது!(படங்கள்,வீடியோ இணைப்பு)

மன்னார் தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை(17) நள்ளிரவு கிடைக்கப்பெற்ற மண்ணென்னைய் மக்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பே இரவோடு இரவாக சில வசதி படைத்தவர்களுக்கு நூற்றுக்கணக்கான லீற்றர் அனுமதி இன்றி வழங்கப்பட்ட நிலையில் மண்ணென்னைக்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்த நிலையில் எரி பொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

தலைமன்னார் பிஜர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று மற்றும் இன்று நள்ளிரவு இருதடவைகளாக 6500 லீற்றர் மண்ணென்னை என சுமார் 13000 லீற்றர் மண்ணென்னை அதிகாலை மக்களுக்கு விநியோகிப்பதற்கான வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதிகாலை நூற்றுக்கணக்கான மக்கள் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற நிலையில் 400 ரூபா வீதம் 500 பேருக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தினரால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 1000 பேருக்கு 400 ரூபாய் வீதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 
இந்த நிலையில் மக்கள் குடும்ப அட்டைகளிலும் பதிவுகளை மேற்கொண்டு மண்ணென்னை பெற சென்ற நிலையில் 200 நபர்களுக்கு கூட வழங்காத நிலையில் மண்ணென்னை நிறைவடைதுள்ளது.

இதனால் குழப்பமடைந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் இந்த நிலையில் எரிபொருள் தாங்கியை மக்கள் முன்னிலையில் சோதித்த நிலையில் தாங்கியிலும் மண்ணென்னை இருக்கவில்லை.

 
இவ்வாறு இருக்க அனுப்பி வைக்கப்பட்ட 13400 லீற்றர் மண்ணென்னைய்க்கு என்ன நடந்தது என விசாரித்த நிலையில் 250 லீற்றர் அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார் ஆனாலும் தங்களுக்கு அவ்வாறு வழங்கப்படவிலை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் எரிபொருள் வழங்கப்பட்ட பதிவுகளை சோதித்த நிலையில்  இன்று அதிகாலையிலேயே பணம் படைத்த சிலருக்கு நூறுக்கு மேற்பட்ட லீற்றர்கள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் கைது செய்யுமாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிறசெய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பசில்!

யாழ் மக்களுக்கு அரிசி இலவசம்- விசேட அறிவிப்பு !

வவுனியாவில் காணி மோசடி தீவிரம்!

வீதிக்கு வந்த கப்பலும் விழி பிதுங்கிய மக்களும்!

உலகவங்கியின் நிதிப்பங்களிப்பில் யாழில் நிர்மாணிக்கப்பட்ட குளங்கள் திறப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *