
சென்னை, ஜுன் 17
முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை சென்னை மேல்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுவிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்
தமிழக ஆளுநரின் ஒப்புதல் இன்றியேனும் ராஜிவ் காந்தி கொலைவழக்கின் குற்றவாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் தங்களை விடுவிக்குமாறு மனுவில் கோரியிருந்தனர்.
குறித்த வழக்கு சென்னை மேல்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி நிராகரித்துள்ளார்.